0
comments
கேரள அமைச்சரவையில் சிறுபான்மையினர் ஆதிக்கம்இப்போதுதான் காங்கிரஸ் கட்சியின் லட்சணம் நாயர் சேவை சங்கத்துக்கு (என்.எஸ்.எஸ்) தெரிந்திருக்கிறது. ”பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டைவிட்டு போய்விட வேண்டுமா?” என்று, அமைச்சரவை மாற்றத்தால் கொந்தளித்த என்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் சுகுமாரன் நாயர் கேட்டிருக்கிறார். காலம் கடந்த பின்னர் ஞானோதயம். கேரளாவில் தற்போது நிலவும் அரசியல் நிலைமை நீடித்தால், கேரளாவில் இருந்து ஹிந்துக்கள் அகதிகளாக பிற மாநிலங்களுக்கு (காஷ்மீர் ஹிந்துக்கள் போல) படையெடுக்க வேண்டிய நிலைமை வரலாம்.
கிறிஸ்தவர்கள்: 6 பேர்
1. முதலமைச்சர் ஓமன் சாண்டி
2. கே.ஜோசப் (இருவரும் காங்கிரஸ்)
3. கே.கே.மானி
4. பி.ஜே.ஜோசப் (இருவரும் கேரள காங்கிரஸ் – மானி பிரிவு)
5. அனுப் ஜேக்கப் (கேரள காங்கிரஸ் -ஜேக்கப் பிரிவு)
6. ஷிபு பேபி ஜான் (ஆர்.எஸ்.பி -பி பிரிவு)
இஸ்லாமியர்கள்: 6 பேர்
1. ஆர்யாதான் முகமது (காங்கிரஸ்)
2. பி.கே. குன்னாலி குட்டி
3. பி.கே.அப்து ரப்
4. வி.கே.இப்ராஹீம் குஞ்சு
5. எம்.கே.முனீர்
6. மஞ்சாலம் குழி அலி (ஐவரும் முஸ்லிம் லீக்)
மக்கள் தொகையுடன் ஒப்பீடு:
மொத்த அமைச்சர்கள்: 22 பேர்.
சிறுபான்மையினர்: 12 பேர்.
பெரும்பான்மையினர்: 10 பேர்.
மக்கள்தொகையில் சிறுபான்மையினர் விகிதம்: 44
அமைச்சரவையில் சிறுபான்மையினர் விகிதம்: 54
மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் விகிதம்: 56
அமைச்சரவையில் பெரும்பான்மையினர் விகிதம்: 46

இங்கே விவாதம் திசை திரும்புகிறது என்று நினைத்தாலும் நீங்கள் துரோணர் பற்றி எழுதியதால் இதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அவர் ஆசிரியர். ஆசிரியர் பணி என்பது பிராம்மண வர்ணத்தைச் சேர்ந்தது. ஆனால் கர்ணன் தொடையில் வண்டு துளைக்கும்போது அவன் க்ஷத்திரியன் என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள் அல்லவா அப்போதே ஒருவனின் பிறப்பை வைத்து இவன் இப்படித்தான் செயல்படுவான் என்று நினைப்பது இருந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.அன்புள்ள ******,
2004 முதல் 2009 வரை தாம் பலவீனமாக இருக்கும் மாநிலங்களில் கட்சியை வளர்க்க எந்த நடவடிக்கையையும் பா.ஜ.க சரிவர எடுக்கவில்லை. அந்த ஐந்து வருட காலத்தில் நடந்த சட்ட சபைத் தேர்தல்களில், தங்களுக்கு அபரிமிதமான ஆதரவு உள்ள மாநிலங்களில் மட்டுமே (குஜராத், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர்) மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அபரிமிதமான ஆதரவு இருந்தும் உட்கட்சிப் பிரச்சனைகளால் ஆட்சியைத் தக்க வைக்க முடியாமல் தோல்வி கண்ட மாநிலம் ராஜஸ்தான். மற்ற சில மாநிலங்களில் (ஹிமாசலப் பிரதேசம், பஞ்ஜாப்) பெற்ற வெற்றி, பா.ஜ.க ஆதரவு ஓரளவிற்கும், அங்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மீதான வெறுப்பும், கோவமும் சேர்ந்ததாலும் ஏற்பட்ட வெற்றி என்று சொல்லலாம். உள்ளாட்சி தேர்தல்களில் பெருவாரியாக வெற்றி பெற்றும் சட்டசபை தேர்தலில் மாபெரும் தோல்வி பெற்ற மாநிலம் தில்லி. கட்சியை நன்றாக வளர்த்து, நல்ல முறையில் வெற்றி கண்ட மாநிலமாக கர்நாடகத்தை மட்டும் சொல்லலாம்.
கட்சி தொடங்கிய காலத்திலிருந்து முப்பது வருடங்களுக்கும் மேலாக கட்சிப்பணியாற்றியவர், 1998 முதல் 2004 வரை பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் பொருளாதார, வெளியுறவு போன்ற துறைகளின் அமைச்சராக இருந்தவர், கட்சியிலும் பல பொறுப்புகள் வகித்தவர், இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர், ஆகிய சிறப்புகள் பெற்ற ஒரு மூத்த தலைவரை, மரியாதை நிமித்தமாகக் கூட ஒரு விசாரணைக்கு ஏற்பாடு செய்யாமல், அவரின் தரப்பு நியாயங்களைக்கூட கேட்காமல், சிந்தனைக் கூட்டத்திற்கு வந்தவரை, சற்றும் எதிர்பாராமல், தொலை பேசி மூலம் கட்சியிலிருந்து வெளியேற்றம் செய்தது நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தந்தனென்னவோ உண்மை தான். கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக, கட்சியினர் தங்கள் ஆதர்ச தலைவராகப் போற்றும் சர்தார் வல்லபாய் படேலைப் பற்றி அவருக்குக் கெட்ட பெயர் ஏற்படும் வகையில் எழுதியது மாபெரும் தவறு தான். ஆனால் இத்தனை ஆண்டுகள் கட்சியில் உழைத்த ஒரு மூத்த தலைவரான அவரை நீக்கம் செய்த முறை கட்சியிலேயே பலருக்கு அதிருப்தி தருவதாக இருந்துள்ளது. எனினும் ஜஸ்வந்தை நீக்கம் செய்ததன் மூலம் மற்ற அதிருப்தியாளர்களுக்கு, கட்சிக் கொள்கைக்கு மாறாக கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்பவர்களுக்கு இந்த கதி தான் ஏற்படும், என்கிற ஒரு பலமான தகவலை கட்சித் தலைமை அனுப்பியது. இதன் மூலம், ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு வசுந்தராவைக் கட்சித் தலைமை வற்புறுத்த ஆரம்பித்தது.
ஜஸ்வந்த் சிங், யெஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி ஆகியோர் அதிருப்தியாளர்களாக மாறியிருந்த சமயத்தில், சென்னைக்கு முதல் பயணமாக வந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு மோகன்ஜி பாக்வத் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரியாலயத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பா.ஜ.க பற்றி கேட்கப்பட்ட சரமாரியான கேள்விகளுக்கு நிதானமாகவும் தெளிவாகவும் பதிலளித்தார். “ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகர்கள் பலர் பா.ஜ.க வில் இருந்தாலும் அது தனியான சுதந்திரமான கட்சி, அதன் பிரச்சனைகளை அதுவே தீர்த்துக் கொள்ளக்கூடிய சக்தி படைத்தது. தற்போது அக்கட்சிக்குள்ளே நடந்து கொண்டிருக்கும் பூசல்கள் மனதுக்கு வருத்தம் அளிப்பதாக இருந்தாலும், அவற்றிலிருந்து விரைவில் மீண்டு வரும். ஆர்.எஸ்.எஸ். என்பது சமூக மற்றும் கலாசார இயக்கமேயன்றி, அரசியல் இயக்கம் அல்ல. எங்களுக்கு அரசியல் செய்யவும் விருப்பமில்லை. பா.ஜ.க விற்கு நாங்களாக எந்த அறிவுரையும், ஆலோசனையும் வழங்கமாட்டோம். அவர்களாக எங்களிடம் வந்து அறிவுரையோ ஆலோசனையோ கேட்டால் வழங்கத் தயாராக இருக்கிறோம்” என்று மிகத் தெளிவாகத் தெரிவித்தார் மோகன்ஜி.
இதனால் மிகவும் வெறுத்துப்போன ஆர்.எஸ்.எஸ். மீண்டும் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. புயலின் நடுவே லாகவமாக படகு செலுத்திப்போகும் படகோட்டி போல, திரு மோகன்ஜி பாக்வத் அவர்கள், ஆழமான பிரச்சனைகளில் பா.ஜ.க சிக்கியிருந்த நேரத்தில், ஊடகங்களின் கேள்விக் கணைகளை லாகவமாக எதிர்கொண்டார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடந்த இக்கூட்டத்திற்கு வந்திருந்த பத்திரிகையாளர் அனைவரும் கூட்டம் முடிந்த பின்னர் மோகன்ஜியின் திறமையை வியந்தும் பாராட்டியும் பேசினர். இக்கூட்டத்தில் அவர், தான் ஏற்கனவே ”டைம்ஸ் நௌ” தொலைக்காட்சிக்குக் கொடுத்த பேட்டியில் சொன்னதை மீண்டும் நினைவுகூர்ந்தார். மேலும், “ஒரே மனப்போக்கும் சிந்தனையும் உள்ள அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து தேசத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபடவேண்டும். நம்முடைய தனிப்பட்ட வேற்றுமைகளும், கருத்து வேறுபாடுகளும், நம் ஒற்றுமையையும் உழைப்பையும் பாதிக்காவண்ணம் பார்த்துக் கொள்ளவேண்டும். சங்கத்தைப் பொறுத்தவரை இப்போது செய்துகொண்டிருக்கும் நற்பணிகளை மேன்மேலும் அதிகப் படுத்தி இந்நாட்டிற்குச் சேவையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும். பா.ஜ.க தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளை விரைவில் முடிவிற்குக் கொண்டு வந்து மீண்டும் புத்துணர்வுடன் திகழும். அதற்கான வேலைகளில் பா.ஜ.க முழுமனத்துடன் இறங்கிவிட்டது. அக்கட்சிக்குத் தேவையான சமயத்தில் அறிவுரையும், ஆலோசனையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறி முடித்தார்.
2009 தேர்தலின் முடிவுகளில் பா.ஜ.க விற்கு மட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் ஒரு முக்கியமான பாடம் உள்ளது. கடந்த காலக் கட்டத்தில், குறிப்பாக சென்ற பத்து ஆண்டுகளில், ஆர்.எஸ்.எஸ் அரசியல் விவகாரங்களை முழுவதுமாகப் பா.ஜ.க விடமே ஒப்படைத்து விட்டு ஒதுங்கியிருந்தது தவறு என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது. வாஜ்பாய், அத்வானி போன்ற மூத்த தலைவர்களின் பிராபல்யமும், கட்சியில் அவர்கள் மேலிருந்த அபரிமிதமான வழிபாடும், அதற்குக் காரணமாக இருக்கலாம். அவ்விரு பெருந்தலைவர்களும் கூட “சர்சங்கசலக்” (ஆர்.எஸ்.எஸ். தலைமை) என்கிற ஸ்தானத்திற்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுக்கத் தவறிவிட்டார்களோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால், சங்கப் பின்னணி இல்லாமல், சங்கத்தின் வெளியிலிருந்து பா.ஜ.கவில் இணைந்த பலர் பல பதவிகளில் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். அவர்கள் சங்கத்தின் முக்கியத்துவத்தை உணரும் வகையில் வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள் நடந்துகொண்டிருக்க வேண்டும்.
மத நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் நடைபெற்று வரும் மாறுதல்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். முஸ்ஸிம்களின் செயல்பாடும், கிறிஸ்தவர்களின் செயல்பாடும் குறிப்பாக தரைக்கு அடியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான கிறிஸ்தவ தேவாலயமும் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளன. மத்திய தர வர்க்கத்தினரின் உணவுப் பழக்க வழக்கமும் மாறத் தொடங்கி உள்ளது. சீனர்கள் பாரம்பரியமாக அரிசி உணவை சாப்பிடுவது வழக்கம். இப்போது அரிசி உணவைச் சாப்பிடுவது குறைந்துள்ளது. நன்கு படிக்காத ஏழைகள் மட்டும்தான் அரிசியை முக்கிய உணவாகக் கொண்டுள்ளனர். புதிதாக கிறிஸ்தவத்திஅத் தழுவியவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளித்துள்ளன. வேலையில் பதவி உயர்வு கிடைக்கவும் இது உதவுகிறது.
கொள்கை வடிவமைப்பாளர்கள் 60 களிலும், 70 களிலும்தான் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் அவர்கள் 2009 க்கு வரவேயில்லை. சீனவில் மிகப்பெரிய சமூக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு பொருளாதார வளம் செழிப்பாக இருக்கிறது. ஆனால் ஆன்மிக ரீதியாக வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் இந்தியத் தூதராக செயல்பட்ட நிருபமா ராவ் இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக பதவி ஏற்றுள்ளார். அவர் சீனாவுக்குத் தகுந்தவர்களை அனுப்பி வைக்க வேண்டும். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஆன்மிக உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது சீனத் தோழர் ஒருவர் கூறியது சற்று கசப்பானதுதான். அது துரதிர்ஷ்டமானதாகக் கூட தோன்றலாம். ஆனால் அதில் உண்மையின் கீற்று காணப்படுகிறது. ‘நமது இரண்டு நாடுகளும் வேரற்ற, திடமற்ற அன்னிய கல்வி பயின்றவர்களால் ஆளப்பட்டு வருவது விசித்திரமாகவே தோன்றுகிறது. அவர்களுக்கு சொந்த தேசங்களின் கலாசார வேர்கள் குறித்தோ, பண்பாட்டுச் செழுமை குறித்தோ ஆழமான அறிவு எதுவும் கிடையாது’ என்பதுதான் அவர் கூறிய கருத்தாகும்.
இத்தகைய பாரம்பரியமிக்க சேதுபதிகளில் பலரும் புகழ்வாய்ந்தவர்கள். கிழவன் சேதுபதி, முத்துராமலிங்க சேதுபதி, பாஸ்கர சேதுபதி இப்படிப் பலர். இவர்களில் பாஸ்கர சேதுபதி சுமார் நூறு ஆண்டுகளுக்குள் வாழ்ந்தவர். சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவில் சிகாகோவில் நடந்த சர்வ மத மாநாட்டுக்கு அனுப்பி வைத்தவர். அவர் 1897ல் தாய்நாடு திரும்பிய போது இலங்கை வந்து அங்கிருந்து ராமேஸ்வரம் வந்து காலடி வைத்த போது, சுவாமிஜியின் காலடி பாரத புண்ணிய பூமியில் படுவதற்கு முன் தன் தலைமீது காலடி வைக்க வேண்டுமென்று கேட்டுப் பெற்றவர். பற்பல தானதர்மங்களைச் செய்தவர். அந்தக் காலத்திலேயே சென்னை கிருத்துவக் கல்லூரியில் எஃப்.ஏ. எனப்படும் இண்டெர்மீடியட் பாஸ் செய்தவர். ஆங்கிலம், தமிழ் இவற்றில் பாண்டித்தியம் வாய்ந்தவர். கலை இலக்கியங்களைப் போற்றியவர். இப்படிப்பட்ட பெருமைக்குரியவர்களெல்லாம் வாழ்ந்த குலம் ‘சேதுபதிகள்’ குலம்.
இதனை அன்னிய அடிவருடிகள், வெளிநாட்டு சரித்திர ஆசிரியர்கள் கூறும் ஒருதலைப் பட்சமான செய்திகளைக் கொண்டு, அந்த பாதிரியாரை வானளாவப் புகழ்ந்து அவரது மரணத்தைப் போற்றியும், கிழவன் சேதுபதியின் முடிவைக் கண்டித்தும் எழுதி வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, சமீபத்தில் “இன்று” என்ற தலைப்பில் செய்திக்கு முன் ஒளிபரப்பும் வரலாற்றுச் செய்தியொன்றில் ஒரு தொலைக்காட்சி ஊடகம், இந்த பிரிட்டோ பாதிரியார் செய்தது பெரும் தியாகம் என்றெல்லாம் வர்ணித்தார்கள். இப்போதும் கூட இந்த மதமாற்ற நாடகங்களைப் புரிந்து கொள்ளாத நம் மக்களைப் பற்றி நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது.
பிரிட்டோ பாதிரியாரின் புதிய சீடர்கள் அவருக்கு அருளானந்தர் என்று பெயர் சூட்டி பெருமைப் படுத்தினர். இவர் இந்தப் பகுதியில் குடியேறிய ஒரு சில நாட்களிலேயே இவருக்கு நிறையபேர் மதமாற்றத்திற்கு இணங்கி விட்டனர். அந்த நிலையில் அடுத்தடுத்த கிராமங்களுக்கும் செல்லும் நோக்கில் இவர் சிவகங்கை வழியாக பாகனேரிக்கு நான்கு மைல் தூரத்தில் உள்ள மேலமங்கலம் எனும் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த இராமநாதபுரம் கிழவன் சேதுபதியின் முதலமைச்சராக இருந்த குமார பிள்ளை இந்தப் பாதிரியார் தங்கள் மக்களை மதமாற்றம் செய்யும் செய்தியறிந்து மறவர் படையைக் கொண்டு பிரிட்டோ பாதிரியாரைக் கைது செய்தார். அந்த மறவர் படையினர் இந்தப் பாதிரியாரையும் அவருடன் வந்தவர்களையும் காளையார்கோயிலுக்குக் கொண்டு சென்றனர். அங்கு இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சுமார் பத்து நாட்கள் காளையார் கோயில் சிறையில் இருந்த பிறகு இவர்கள் அனைவரும் பாகனேரிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அப்போது கிழவன் சேதுபதியிடமிருந்து, கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் பாதிரியாரையும் அவரோடு இருப்பவர்களையும் இராமநாதபுரத்துக்குக் கொண்டு வரும்படி கட்டளை வந்தது.
அரச குடும்பத்தில் ஒருவன் மதம் மாறினால் மக்களும் அல்லவா மதம் மாறிவிடுவார்கள்! அப்படி மக்கள் மதம் மாறத் துணிந்தால் இந்த தாதியாத் தேவனைத் தனக்கெதிராக ஆட்சியைப் பறிக்க போர்த்துகீசியர் தூண்டக் கூடுமல்லவா என்றெல்லாம் யோசித்தான் கிழவன் சேதுபதி. இது வெறும் மதமாற்றம் மட்டுமல்ல; போர்த்துகீசிய ஆதிக்கத்தை கடற்கரையையும் தாண்டி உள்நாட்டில் ஏற்படுத்தும் நோக்கமும் இதில் இருக்கிறது என்று சிந்தித்தார் அவர். இது அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இது ஏதோ கற்பனையான பயம் என்று எண்ணுவதற்கில்லை. வரலாற்று அடிப்படையில் அவ்வாறு சேதுபதி பயந்ததற்குக் காரணங்கள் இருந்தன. 1532 – 1582 காலகட்டத்திலேயே கத்தோலிக்க மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட மீனவர்களுடன் தூத்துக்குடியில் வாழ்ந்தவர்களும் போர்த்துகீசிய குடிமக்களாகக் கருதப்பட்டார்கள். இதனை ஒரு கிறிஸ்தவ பாதிரியாரே எழுதியிருக்கிறார். ஆம்! பிஷப் கால்டுவெல் கூறும் செய்தி இது.“Most of the Historians who have written on this account have mostly dependant on Jesuit records and so their picture is necessarily pro-christian. The historian’s task is to find out the truth. Britto’s death issue was carefully propagated in such a way so as to create public sympathy in India and Europe”.பாதிரியாரின்பால் இரக்கம் உண்டாகும்படி பிரசாரம் மேற்கொள்ளப் பட்டது மிகவும் திட்டமிட்டு நடத்தப் பட்ட செயல்பாடு என்று இவர்கள் சொல்வதிலிருந்து உண்மை நிலவரத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
- History of Tamilnadu from Viswanatha Nayakar to M.G.Ramachandran: ஆர்.எட்வின் ராஜன் & டி.ஞானசேகர் (பக்கம் 63, 64)
”இந்து மரபுகள் .. எந்த அளவிற்கு பூரணமான பிரபஞ்ச தரிசனம் சாத்தியமோ, அதைத் தொட முயன்றன. (மதம் என்கிற) இந்த மகாசமுத்திரத்தை முதன் முதலில் ருசி கண்டவை இந்து தரிசனங்களே. மரத்தை வழிபடும் பழங்குடியினரும், காளையை, யானையை, சிங்கத்தை, நாகங்களை வழிபட்டு வந்தவர்களும் இங்கே “மிருக இயல்பாளர்கள்” என்று இழித்துரைக்கப் படவில்லை. அவர்களது வழிபாட்டுக் கூறுகளும் மரியாதையுடன் தெய்வீகக் கணங்களில் சேர்த்துக் கொள்ளப் பட்டன… இது ஒரு யுக்தியாகவோ, தந்திரமாகவோ செய்யப் படவில்லை, மாறாக இந்த இணைத்துக் கொள்ளும் தன்மை ஆழ்ந்து அனுபவித்தறிந்த ஆன்மிக மெய்யுணர்வின் அடிப்படையில் முழுமையான புரிதலுடன் கூடியதாகவே இருந்தது… ஒவ்வொன்றும் மாறுதலுக்கும், சீரமைப்புக்கும் உட்பட்டது தான் என்பதை இயல்பான ஒரு விஷயமாகவே இந்து மரபு கருதியது.. இதனால் விளையும் மோதல்களை சமன்வயப் படுத்த மிக அழகிய சொல்லாடல்களையும் அது உருவாக்கியது” – Missionaries in India, பக்கம் 41-42
”ஆனால் இது எல்லாவற்றையுமே மிஷநரிகள் திரிபுகளுக்கு உட்படுத்தி இழித்துரைத்தனர். இணைப்புத் தன்மையை பிற மதங்களை முழுங்குவதற்கான குயுக்தி என்று கண்டித்தனர்; முரணியக்கமாக விரிவடைந்து செல்லும் தத்துவ விவாதங்களை வெற்றுக் கூச்சல் என்றனர்; கட்டற்ற சுதந்திரத் தன்மையை ”கருத்து ரீதியான பலவீனம்” என்று கூறினர். உள்முகப் பட்ட ஞானத் தேடலை ”நோயுற்ற சுய வெறுப்பு” என்று ஏளனம் செய்தனர். சத்தியத்தை நோக்கிச் செல்லப் பல வழிகள் உண்டு என்று காட்டுவதை வழவழாத் தன்மை என்று கேலி செய்தனர். எல்லையற்ற பரம்பொருளுக்கு எல்லையற்ற பல வடிவங்கள் உண்டு என்பதை “குழப்படி” என்று முத்திரை குத்தினர். கருத்துச் சுதந்திரம் என்பதற்கு “கிறிஸ்தவ மதத்தை மேன்மையானதாகச் சித்தரிப்பதும், இந்து மதத்தை இழித்துரைப்பதும்” என்று பொருள் கண்டனர். …. மதமாற்றம் என்பது ஒரு செயல்பாடு மட்டுமல்ல, அது தான் கிறிஸ்தவத்தின் உயிர்நாடியே என்னும் வகையில் மதப் பரவலை நிகழ்த்தினர். ஆனால் ஒரு சுவாமி சிரத்தானந்தர் (ஆரிய சமாஜத் துறவி) கிள்ம்பி இந்துமதம் திரும்ப விழைபவர்களுக்காக வழிமுறைகளை உருவாக்குவதைக் கண்டு “இதற்கு இந்து மத சம்பிரதாயங்களின் படி இடமே கிடையாது” என்று தீவிர பிரசாரம் செய்தனர்! ” – Missionaries in India, பக்கம் 43.

“அதில் ஆச்சரியப் பட ஏதுமில்லை.. ஏனென்றால், கிறிஸ்தவத்தின் உண்மையான, அதிகாரபூர்வமான கருத்தும் அதுவே தான். ”வெளிப்படுத்தப் பட்ட”, இறுதிநாள், இறுதித் தீர்ப்பை நம்புகிற எந்த ஒரு சித்தாந்தமும் – கிறிஸ்தவமும் சரி, இஸ்லாமும் சரி, மார்க்சிய-லெனினிய- மாவோயிசங்களும் சரி இந்த நிலைப்பாடு கொண்டவை தான்: ஒரே சத்தியம், அது அந்த ஒரு மனிதனுக்கு வெளிப்படுத்தப் பட்டு விட்ட்து.. அவனால், அவன் சார்பாக அந்த ஒரே புத்தகத்தில் அது பதிவு செய்யப் பட்டு விட்டது. அந்த ஒரே நூலின் சொற்கள் நேரடியாகப் புரிந்து கொள்ளக் கடினமானவை (!!!) என்பதால், உலகம் அனைத்தும் அவற்றை நடைமுறைப் படுத்தும் ஒரு நிறுவனத்திற்கு, ஒரு இடைத்தரகருக்கு, ஒரு “ஏஜென்ஸி”க்கு அடிணிய வேண்டும்.. அனைத்துலகமும் இதை ஏற்றுக் கொள்ளும் “இறுதி நாளில்” தான் உலகனைத்தும் ஒளி உண்டாகும்; எனவே அந்த நாளை வரச் செய்ய வேண்டியது ஏஜென்ஸியின் இன்றியமையாத கடமையாகிறது.. அந்த “ஒளி” “காட்டப் படும்” அதை மறுப்பவர்கள், ஏற்றுக் கொள்ளாதவர்கள், தங்களைத் துன்புறுத்திக் கொள்வது மட்டுமல்ல, தேவனின் ஆணைக்கும், அல்லாஹ்வின் இறை விருப்பத்திற்கும் (அல்லது, கம்யூனிசத்தின் படி “சரித்திரத்திற்கும்”) குறுக்கே வருகிறார்கள் என்றே ஏஜென்ஸி கருத வேண்டியாகிறது.. ஆக, இதிலிருந்து தெளிவாகப் புலனாவது என்னவென்றால், சர்ச் மதம் மாற்றியே ஆக வேண்டும், மாவோ புரட்சியை ஏற்றுமதி செய்தே ஆக வேண்டும்; கொமெய்னி இறைத்தூதரை பலவந்தமாக அறிவித்தே ஆகவேண்டும்.. அவர்கள் யாரும் செய்யாமல் தப்பிக்கவே முடியாத கடமைகள் இவை”. (Missionaries, பக்கம் 12).இதைத் தொடர்ந்து, ஏஜென்ஸியின் பரவலையும், வீச்சையும் நிரூபிக்கும் பல ஆதாரபூர்வமான விவரங்களை ஷோரி அளிக்கிறார். ”உலகளாவிய கிறிஸ்தவத்தை நடத்திச் செல்ல வருடந்தோறும் 145 பில்லியன் டாலர்கள் தேவைப் படுகின்றன” (1990களில்) என்று கிறிஸ்தவ நிறுவனம் ஒன்றே கணக்கிடுகிறது. 1989ம் வருட விவரங்களின் படி, உலகெங்கும் 40 லட்சம் முழுநேரப் பணியாளர்கள், 1800 கிறிஸ்தவ டிவி மற்றும் ரேடியோ சேனல்கள், சுமார் 3 லட்சம் வெளிநாட்டு மிஷநரிகள், அவர்களைப் பயிற்றுவிக்க 1000க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள்…” என்று போகிறது இந்தப் பழைய கணக்கு.
“பஞ்சம் பெரும் அற்புதத்தையும், மகிமையையும் கொண்டு வந்திருக்கிறது. போதனைக்காக வரும் மாணவர்கள் நிரம்பி வழிகின்றனர்; ஞானஸ்னான நீர் ஓடையாக வழிந்தோடுகிறது. அதில் தவிக்கும் பரதேசி ஈசல்கள் கூட்டம் கூட்டமாக பரமண்டலத்தை நோக்கிப் பறந்து வருகின்றன (“starving little tots fly in masses to heaven”). மருத்துவமனையே விசுவாசிகள் கூட்டமாகி விடுகிறது. நெடுஞ்சாலைகளிலும், முனைகளிலும் நின்று அவர்களை “வற்புறுத்தி அழைத்து வர” (புனித லூக்காவின் சுவிசேஷம், 14.23) வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் தாமாகவே வருகிறார்கள்!” (Missionaries, பக்கம் 15).நிறுவன கிறிஸ்தவத்தின் ஊடுருவல் யுக்திகள் சாதாரணமானவை அல்ல. எதிரெதிர் சக்திகள் என்று எண்ணப் பட்டவை கூட அதன் பரவலுக்கான மறைமுக உதவிகளாகவே இருந்தன என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இவற்றை ”வேலைப் பங்கீடு” (Division of Labour) என்ற நூலின் இரண்டாம் பகுதியில் ஷோரி விவரிக்கிறார்.